'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை |

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ராக்கி. 'தரமணி' படத்தில் நடித்த நடிகர் வசந்த் ரவி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். பாரதிராஜா வில்லனாக நடித்திருந்தார் .
நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது .கேங்ஸ்டர் கதைக்களத்தை மையமாக கொண்ட இப்படம் ஹிந்தியில் ரீமேக்காக உள்ளது. இதன் உரிமையை வாக்கோ பிலிம்ஸ் பெற்றுள்ளதாக ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. விரைவில் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கிற்கான வேலைகள் தொடங்க இருக்கிறது .
இயக்குனர் அருண்மதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாணிக்காயிதம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. மேலும் இவர் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க உள்ளார்.