துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் ரூ.1000 கோடி வசூலைக் கடந்து இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது.
'பீஸ்ட், கேஜிஎப் 2' என பெரிய படங்கள் வந்தாலும் 25 நாட்களைக் கடந்து இப்படம் ஓடிக் கொண்டிருப்பது ஆச்சரியத்தை எற்படுத்தியுள்ளது. ஹிந்தியில் இப்படம் தற்போது 250 கோடி வசூலைக் கடந்துள்ளது.
ராஜமவுலி இதற்கு முன் இயக்கிய 'பாகுபலி, பாகுபலி 2' படங்களும் ஹிந்தியில் 100 கோடி வசூலைக் கடந்தது. தற்போது 'ஆர்ஆர்ஆர்' மூலம் ஹாட்ரிக் 100 கோடி கிளப் வசூலைத் தொட்டிருக்கிறார் ராஜமவுலி.
இப்படத்தின் ஹிந்தி வெளியீட்டு உரிமை 100 கோடிக்கு விற்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இப்போது அதை விட இரண்டு மடங்கிற்கும் மேல் வசூல் கிடைத்துள்ளது. தெலுங்கிலும் இப்படம் 250 கோடிக்கும் அதிகமாகவே வசூலித்துள்ளது. இந்த வார இறுதி வரையிலும் 'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு வரவேற்பு இருக்கும் என்றும் அடுத்த வாரம் தான் கூட்டம் குறையும் என்றும் தெரிவிக்கிறார்கள்.