'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்து ஓடிடி தளத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'சூரரைப் போற்று'. இப்படத்தின் ஹிந்தி ரீமேக் இன்று(ஏப்., 25) பூஜையுடன் ஆரம்பமானது. தமிழில் படத்தை இயக்கிய சுதா கொங்கரா, ஹிந்தி ரீமேக்கையும் இயக்குகிறார். அக்ஷய் குமார், ராதிகா மதன் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் பூஜை இன்று மும்பையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தை இணைந்து தயாரிக்கும் சூர்யாவும் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
படப்பிடிப்பு ஆரம்பமானது பற்றி அக்ஷய்குமார், “பக்தியுடன் தேங்காயை உடைத்து எங்கள் இதயங்களில் சிறிய பிரார்த்தனையுடன் இன்னும் தலைப்பிடாத எங்களது, கனவுகளையும் அதன் சக்தியைப் பற்றிய படம் ஆரம்பமானது. இப்படத்திற்கு ஏதாவது தலைப்பு சொல்ல விரும்பினால் நீங்களும் பகிரலாம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.