தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பாலிவுட்டில் இப்போதும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது ஷோலே படம் தான். இதன் வெற்றியையும், வசூலையும் அந்தக்காலத்தில் மிகப்பெரியது. அமிதாப் பச்சன், தர்மேந்திரா, அம்ஜத்கான், ஹேமமாலினி, ஜெயபாரதி, சஞ்சீவ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள், ரமேஷ் சிப்பி இயக்கி இருந்தார்.
இந்த படத்தை ரீமேக் செய்யவும், இதே தலைப்பில் படம் எடுக்கவும் முயற்சித்து வந்தனர். இந்த நிலையில் இந்த படத்தின் தலைப்பை மற்றவர்கள் பயன்படுத்த தடை விதிக்க கூறி தயாரிப்பு நிறுவனம் டில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில் ஷோலே என்பது ஒரு சிறிய படத்தின் பெயர் அல்ல. அது ஒரு அடையாளம். அதனால் அந்த தலைப்பு பாதுகாப்பற்றதாக இருக்க முடியாது. அதனை யாரும் தவறாக பயன்படுத்தக்கூடாது. தயாரிப்பாளரின் முறையான அனுமதி இன்றி படத்தின் காட்சிகளை வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்தக்கூடாது. ஷோலே.காம் என்ற பெயரில் இணைய தள பக்கங்களும் தடுக்கப்படுகிறது. இதனை மீறுகிறவர்கள் தயாரிப்பாளருக்கு 25 லட்சம் ரூபாய் நஷ்டஈடு கொடுக்க வேண்டும். என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.