இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? |
பாலிவுட் நடிகர் அமீர்கான் தயாரித்து நடித்து கடந்த 11ம் தேதி திரைக்கு வந்த படம் லால் சிங் தத்தா . இந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாதால் பலத்த அதிர்ச்சி அடைந்திருக்கிறார் அமீர்கான். இந்தநிலையில், இப்படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் சிலர் வெளியிட்டு வந்துள்ளார்கள். இதுகுறித்து வயாகாம் 18 நிறுவனம் பெங்களூரில் உள்ள பனஸ்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தது. அதையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், பெங்களூரில் உள்ள ஓரியண்ட் மாலில் இருந்து லால் சிங் தத்தா படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களிடமிருந்து கம்ப்யூட்டர் மற்றும் கருவிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளார்கள் . அந்த நபர்களிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்ற செய்வதற்காக அவர்கள் ஒரு குழு அமைத்திருப்பதையும் அறிந்து கொண்ட போலீசார், மீதமுள்ள நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.