மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி | ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் இனி நடிக்க மாட்டேன்: பிரகாஷ்ராஜ் | பிளாஷ்பேக்: இளையராஜா நடித்த படம் | பிளாஷ்பேக்: எம்ஜிஆரை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் |
ஹிந்தி நடிகர் அமீர்கான் நடிப்பிற்கு சிறிது காலம் ஓய்வு கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஹிந்தி சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர்கான். சமீபத்தில் இவரது நடிப்பில் ‛லால் சிங் சத்தா' படம் வெளியாகி தோல்வியை தழுவியது. நான்கு ஆண்டுகளுக்கு பின் அவரது நடிப்பில் வெளிவந்த படம் ஏமாற்றத்தை தந்தது. இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆனதும் படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அமீர்கான் அடுத்து ‛சாம்பியன்ஸ்' என்ற படத்தில் நடிப்பார் என கூறப்பட்ட நிலையில் அந்தபடம் கைவிடப்பட்டதாக தகவல் பரவியது.
இந்த பட அறிவிப்பை வெளியிட்டு அமீர்கான் கூறுகையில், ‛‛சாம்பியன்ஸ் படத்தில் நான் நடிப்பதாக இருந்தேன். ஆனால் இப்போது விலகிவிட்டேன். எனக்கு பதில் வேறு ஒருவர் நடிப்பார். இந்த படத்தை சோனி நிறுவனத்துடன் இணைந்து சிறந்த முறையில் தயாரிக்க உள்ளேன். நான் எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட தற்காலிகமாக சினிமாவில் நடிப்பை விட்டு விலகி ஓய்வெடுக்க எண்ணி உள்ளேன். கடந்த 35 ஆண்டுகளாக சினிமாவிற்காக ஓடினேன். இப்போது எனக்கு நெருக்கமானவர்களுடன் நேரத்தை செலவிட இதுவே சரியான தருணமாக இருக்கும்'' என்றார்.