தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமன்னா நடிப்பில் தற்போது இந்தியில் தயாராகியுள்ள படம் பப்ளி பவுன்சர். பிரபல இயக்குனர் மதூர் பண்டார்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான பெண் பவுன்சர் கதாபாத்திரம் நடித்துள்ளார் தமன்னா. பாடி பில்டிங்கில் ஆர்வம் கொண்ட ஒரு பெண் சூழ்நிலை காரணமாக பவுன்சராக மாறுவதையும் அதன்பிறகு அவர் சந்திக்கும் சுவாரசியமான பிரச்சனைகளை மையப்படுத்தியும் இந்தப் படம் உருவாகி உள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் 23ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் தமன்னா.
அப்படி ஒரு புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், நிஜத்தில் நீங்கள் ஒருநாள் பவுன்சராக ஒருவருக்கு பணியாற்ற வேண்டும் என்றால் யாருக்கு பவுன்சராக பணியாற்றுவீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தமன்னா கொஞ்சமும் யோசிக்காமல் ஹிருத்திக் ரோஷனுக்கு பவுன்சராக பணியாற்ற ஆசை என்று கூறினார். பின் என்ன நினைத்தாரோ, பாலிவுட் நடிகர் விக்கி கவுசலுக்கும் பவுன்சராக பணியாற்ற விரும்புவதாகவும் கூறினார் தமன்னா.




