தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கடந்த 2012ல் ஸ்ரீதேவி நடிப்பில் ஹிந்தியில் வெளியான படம் இங்கிலீஷ் விங்கிலீஷ். வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் பெண்கள் தங்களிடமுள்ள தனித்துவத்தை இழக்க கூடாது என்கிற உத்வேகத்தை ஏற்படுத்தும் விதமாக வெளியான இந்த படத்தை கவுரி ஷிண்டே என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நித்யா மேனன் மற்றும் அஜித் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி தற்போது பத்து வருடங்களை தொட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்தும் கவுரி ஷிண்டே குறித்தும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் மனம் திறந்துள்ளார்.
இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படத்தை என்னால் மறக்க முடியாது. இந்த படப்பிடிப்பில் அம்மா எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார் என்பதை என்னால் நேரில் பார்க்க முடிந்தது. நானும் இதில் கொஞ்ச நேரமே வந்து போகும் விதமாக நடித்து இருந்தேன். பின்னாளில் அம்மா என்னிடம் கூறும்போது என்றாவது ஒரு நாள் நீ கவுரி ஷிண்டேவின் டைரக்ஷனில் நடிக்க வேண்டும்.. அது என்னுடைய ஆசை என்று கூறியிருந்தார். கவுரி ஷிண்டேவும் விரைவில் நாம் இணைந்து பணியாற்றுவோம் என கூறியுள்ளார். அந்த அளவிற்கு கவுரி ஷிண்டே எங்களது குடும்பத்தில் ஒருவராகவே இருக்கிறார்” என்று கூறியுள்ளார் ஜான்வி கபூர்.