‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் |
புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக மாறிவிட்டார் ராஷ்மிகா மந்தனா. அடுத்ததாக விஜய்யுடன் அவர் இணைந்து நடித்துள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் அடியெடுத்து வைத்துள்ள ராஷ்மிகா, அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்த குட் பை என்கிற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஆனாலும் பாலிவுட்டில் முதல் படமாக அவருக்கு அதில் வரவேற்பு கிடைக்கவில்லை.
அதேசமயம் அவர் பாலிவுட்டில் முதன்முதலாக நடிப்பதற்காக அடியெடுத்து வைத்த படம் மிஷன் மஞ்சு. சித்தார்த் மல்கோத்ரா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் 2020லேயே அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு கொஞ்சம் தாமதமாகவே நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இந்த படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. பின்னர் சில காரணங்களால் அதுவும் தடைபட்டது.
இந்த நிலையில் படத்தை தியேட்டர்களில் வெளியிட தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதால் இந்த படம் நேரடியாக வரும் ஜனவரி-18ல் ஓடிடி தளத்திலேயே வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் வரும் ஜனவரியில் நான்கு நாட்கள் இடைவெளியில் ராஷ்மிகா நடித்த இரண்டு படங்கள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.