தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள பெடியா என்கிற திரைப்படம் நாளை (நவ-25) வெளியாக உள்ளது. தமிழிலும் இந்த படம் ஓநாய் என்கிற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார் வருண் தவான். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, சானியா மிர்சா குறித்து ஒரு சுவாரசியமான தகவல் ஒன்றை கூறினார்.
“சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக, முதன்முதலாக ஒரு விளம்பர படத்தில் நடித்தபோது முதல் சம்பளமாக 5000 ரூபாய் கிடைத்தது. அந்த சமயத்தில் சானியா மிர்சாவுடன் நட்பாக பழகி வந்தேன். அப்போது எனக்கு போன் செய்த சானியா, ஆப்பிள் வாங்கி வருமாறு கூறினார். நானும் ஆப்பிளை வாங்கி கொண்டு அவரது வீட்டிற்கு சென்றபோது, கதவைத் திறந்த அவரது அம்மா என் மகள் ஆப்பிள் சாப்பிட மாட்டாளே, யாருக்காக வாங்கி வந்தாய் என்று சத்தம் போட்டார். அப்போது பின்னாலிருந்து வந்த சானியா மிர்சா நான் தான் வாங்கி வரச்சொன்னேன் என கூறிய பின்னரே அவரது அம்மா சமாதானம் அடைந்தார்” என்று கூறினார் வருண் தவான்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சானியா மிர்சா தனது கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரருமான சோயப் மாலிக்கை விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக பரபரப்பான செய்திகள் வெளியான நிலையில், சானியாவுக்கும் தனக்குமான நட்பு குறித்து இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்டபோது இந்த தகவலை கூறியுள்ளார் வருண் தவான்.