சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
கடந்த வருடம் மார்ச் மாதம் இந்தியில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய படம் காஷ்மீர் பைல்ஸ். இந்த படத்தை விவேக் அக்னிஹோத்ரி என்பவர் இயக்கியிருந்தார். தொண்ணூறுகளின் காலகட்டத்தில் காஷ்மீரில் இந்து பண்டிட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களையும், அதனால் பாதிக்கப்பட்ட பண்டிட்கள் காஷ்மீரைவிட்டு வெளியேறி, அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த உண்மைச் சம்பவங்களையும் அடிப்படையாகக்கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது.. அதனாலேயே பாலிவுட்டையும் தாண்டி மற்ற மொழிகளிலும் இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படம் இன்று தியேட்டர்களில் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகி உள்ளது
காஷ்மீரில் கடந்த 1990-ல் கிட்டத்தட்ட 32 காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதின் நினைவு தினமான இன்று (ஜன-19 ) இந்த படத்தை மீண்டும் வெளியிடுவது சரியானதாக இருக்கும் என்பதாலேயே இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்துள்ளதாக இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி கூறியுள்ளார். இந்த படத்தை தியேட்டரில் பார்க்காமல் மிஸ் பண்ணியவர்கள் தவறாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறியுள்ள இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, ஒரு படம் வெளியான ஒரு வருடத்திற்குள்ளேயே இரண்டாவது முறையாக ரிலீஸ் செய்யப்படும் சாதனையையும் காஷ்மீர் பைல்ஸ் செய்துள்ளது என்று கூறியுள்ளார்.