சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
ஹிந்தித் திரையுலகத்தின் வசூல் நடிகர்களில் ஒருவராக சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தவர் அக்ஷய்குமார். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் அவர் நடித்து வெளிவரும் படங்கள் தொடர் தோல்வியைத் தந்து அவரது மார்க்கெட்டையே ஆட்டம் காண வைத்துவிட்டது.
அவர் நடித்து வெளிவந்த, “பச்சன் பாண்டே, சாம்ராட் பிரித்விராஜ், ரக்ஷா பந்தன், கட்புட்லி, ராம் சேது,” ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவின. அந்த வரிசையில் கடந்த வாரம் வெளிவந்த 'செல்பி' படமும் தோல்வியைத் தழுவியுள்ளது. வெளியான மூன்று நாட்களில் வெறும் 10 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
அக்ஷய்குமார் நடித்து அடுத்து 'ஓ மை காட் 2' படம் வெளிவர உள்ளது. இப்படத்தின் வெளியீடு பற்றி இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அடுத்து தமிழில் ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'சூரரைப் போற்று' ஹிந்தி ரீமேக்கிலும் நடித்து முடித்துள்ளார். 'ஓ மை காட் 2' படம் ஏமாற்றினாலும் 'சூரரைப் போற்று' படம் எப்படியும் ஏமாற்றாது என அவரது ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பாலிவுட் ரசிகர்கள் ரீமேக் படங்களைப் புறக்கணித்து வரும் இந்நிலையில் 'சூரரைப் போற்று' ஹிந்தி ரீமேக்கிற்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.