தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
பாலிவுட் நடிகையான சன்னி லியோனுக்கு கேரளாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சில படங்களில் நடித்தும், ஆடியும் இருக்கிறார். இதனால் கேரளாவில் நடக்கும் கடை திறப்பு விழாக்களில், நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். இதற்கான கணிசமான தொகையை பெற்றுக் கொள்ளவார்.
அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்பந்தம் செய்து இருந்ததாகவும் ஆனால் அதில் அவர் பங்கேற்காமல் மோசடி செய்து விட்டதாகவும் ஷியாஸ் குஞ்சு முகமது என்பவர் மாநில குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக சன்னி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தனக்கு எதிராக போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி சன்னிலியோன் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது “மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்துள்ள மனுவில் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை. எனவே வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய இருக்கிறது. எனவே சரியான ஆதாரங்களை மனுதாரர் சமர்ப்பிக்காவிட்டால் சன்னிலியோனை மனுதாரர் தரப்பு துன்புறுத்துகிறது என்று பொருள். இதனால் அவர் கிரிமினல் குற்றம் எதுவும் செய்யவில்லை என்று நீதிமன்றம் முடிவு செய்யும்” என்று கூறி வழக்கை வருகிற 31ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.