‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு |
100 கோடிக்கு மேல் செலவு செய்து தயாராகும் பெரிய பட்ஜெட் படங்களால் சினிமாவுக்கே ஆபத்து என்று பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: பலகோடி ரூபாய் செலவில் தயாராகும் படங்களில் கதை, நடிப்பு என எதுவும் இருப்பதில்லை. அவற்றில் 5 பாடல்கள் இருக்கின்றன. அவற்றை நடன இயக்குநர்கள் கவனிக்கின்றனர். சில ஆக்ஷன் காட்சிகள் இருக்கின்றன. அவற்றை ஸ்டன்ட் இயக்குநர்கள் கவனிக்கின்றனர். படத்தில் இயக்குநருக்கு என்ன வேலை? நடிகருக்கு என்ன வேலை?. மக்கள் பார்க்க விரும்பாத படங்களுக்கு பல நூறு கோடிக்கு மேல் செலவு செய்கின்றனர். அவற்றில் ஒன்றும் இல்லாததால் அவை தோல்வி அடைகின்றன. நல்ல கலைஞர்களை வைத்து வெறும் 50 கோடியில் இவர்கள் படம் எடுப்பதில்லை.
பெரும் பொருட்செலவில் உருவாகும் படங்கள்தான் திரைத்துறையின் வீழ்ச்சிக்கு காரணம். கதை, திரைக்கதை, நடிப்பு அனைத்தும் அவற்றில் வெற்றிடங்களாக உள்ளன. இந்த படங்கள் சினிமாத் துறைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. ஏதோவொரு காரணத்தால் அரிதான ஒரு சில படங்கள் பாக்ஸ் ஆபீஸில் ஹிட் ஆகின்றன. ஆனால், அந்த 3 சதவீத படங்களை தவிர்த்து விட்டு பார்த்தால் மீதமிருக்கும் 97 சதவீத படங்களும் தோல்வி அடைகின்றன. இவை அனைத்தும் பெரிய பட்ஜெட் படங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.