தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
நடிகர் விஜய்யின் 68வது படமே இன்னும் முடியவில்லை. இதை யார் இயக்குகிறார்கள் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.. இந்த நிலையில் விஜய் 69 வது படத்தில் பாலிவுட் அனுபம் கெர் நடிக்கிறார் என்கிற செய்தி வெளியாகியிருப்பதால் விஜய் ரசிகர்களில் பலரும் குழம்பித்தான் போயிருக்கிறார்கள். ஆனால் இது விஜய் படம் பற்றிய தகவல் இல்லை.. பாலிவுட் சீனியர் நடிகரான அனுபம் கெர் கதையின் நாயகனாக நடித்துவரும் 'விஜய் 69' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தைப் பற்றிய செய்தி இது.
69 வயதான அனுபம் கெர் இந்த படத்தில் ஒரு ட்ரையத்லான் வீரராக நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் 537வது படமாக உருவாகியுள்ளது. சாதிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக 69 வயதிலும் ட்ரையத்லான் போட்டிகளில் கலந்து கொண்டு சாதிக்கும் ஒரு முதியவரை பற்றிய படமாக இது உருவாகியுள்ளது. இந்த படம் நேரடியாகவே ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது.