தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பாலிவுட்டின் முன்னணி நடிகை ப்ரிணிதி சோப்ரா. 2011ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது சாம்கிலா, கச்சுலா கில் படங்களில் நடித்து வருகிறார். சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார், தொடர்களிலும் நடித்து வருகிறார்.
ப்ரிணிதி சோப்ராவும் ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ராகவ் சத்தாவும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வந்தது. அவர்கள் பொது வெளியில் ஒன்றாக சுற்றுகிற படங்கள் வெளிவந்தது. ஆனாலும் இருவதரும் இது பற்றி வாய் திறக்கவில்லை. இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்ய இருக்கிற செய்தி வெளியாகி உள்ளது. ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் இருவருக்கும் டுவிட்டர் மூலம் வாழ்த்து சொல்லி வருவது திருமணத்தை உறுதிப்படுத்தி உள்ளது.
வருகிற 13ம் தேதி இருவருக்கும் டில்லியில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் திருமணம் நடக்கும் என்றும் தெரிகிறது. இந்த தகவல்களை இருவரும் உறுதிப்படுத்தவில்லை.