துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா, 2008ம் ஆண்டு ரப் நே பனா தி ஜோடி என்ற படத்தில் அறிமுகமானவர். அமீர்கானுடன் நடித்த பிகே என்ற படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார். அதோடு தயாரிப்பாளராகவும் உருவெடுத்த அனுஷ்கா, 2017ல் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை திருமணம் செய்து கொண்ட பிறகு அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார். தற்போது கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் சக்தா எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா. சமீபத்தில் தான் அளித்த ஒரு பேட்டியில் அவர் கூறும்போது, ‛‛சினிமாவில் நடிப்பதை மிகவும் ரசிக்கிறேன். அதே நேரம் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சம அளவில் நேரத்தை செலவிட ஆசைப்படுகிறேன். முக்கியமாக குடும்பம் மற்றும் குழந்தை வளர்ப்பிலும் அதிகப்படியான கவனம் செலுத்தப் போகிறேன். அதனால் இனிமேல் முன்பு நடித்தது போன்று அதிக படங்களில் நடிக்கப் போவதில்லை. வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே நடிக்கப் போகிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார் அனுஷ்கா.