கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
ராமாயணத்தில் ராமர் சீதையை இலங்கை சென்று மீட்டுவந்த பகுதியை அடிப்படையாக வைத்து தயாரான 'ஆதிபுருஷ்' படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் பிரபாஸ் ராமராகவும், கிர்த்தி சனோன் சீதையாகவும், சைப் அலிகான் ராவணனாகவும் நடித்துள்ளனர். ஓம் ராவத் இயக்கி உள்ளார்.
படத்தில் ராமர், அனுமர் கதாபாத்திரங்களை தவறாக சித்தரித்து இருப்பதாக வட மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் படத்தில் உள்ள சர்ச்சை வசனங்களை நீக்க வேண்டும் என்றும் கண்டனங்கள் கிளம்பி உள்ளன. படத்தின் தொழில்நுட்பமும் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் நேபாளத்திலும் ஆதிபுருஷ் படத்துக்கு எதிர்ப்பு உருவாகி உள்ளது. சீதை நேபாளத்தில் பிறந்ததாக அந்த நாட்டில் நம்பிக்கை நிலவுகிறது. அங்கு சீதைக்கு தனியாக கோவிலும் உள்ளது. ஆனால் ஆதிபுருஷ் படத்தில் சீதை இந்தியாவின் மகள் என்ற வசனம் இடம்பெற்று இருப்பதால் நேபாளத்தில் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகிறார்கள்.
நேபாள தலைநகரமான காத்மாண்டு, போக்ரா ஆகிய நகரங்களில் அனைத்து இந்தி திரைப்படங்களுக்கும் தடை விதித்து அங்குள்ள மேயர்கள் உத்தரவிட்டு உள்ளனர். ஆதிபுருஷ் படத்தில் உள்ள சர்ச்சை வசனத்தை நீக்கும்வரை நேபாளத்தில் இந்தி படங்களுக்கான தடை தொடரும் என்றும் அறிவித்து உள்ளனர். இதற்கிடையில் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில், படத்தின் வசனகர்த்தா மனோஜ் முன்டாஷிர் சுக்லா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தனக்கு மர்ம நபர்களிடமிருந்து தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருப்பதாகவும், இதனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் மனோஜ் முன்டாஷிர் அளித்த புகாரின் பேரில் மும்பை காவல்துறை அவரது வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளது. மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து விசாரித்து வருவதாகவும் மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.