தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

சமீபத்தில் வெளியான தி கேரளா ஸ்டோரி படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கேரளாவில் உள்ள இளம் பெண்கள் முஸ்லிம் தீவிரவாதிகளாக மாற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதாக அந்த படத்தின் கதை இருந்தது. தற்போது தீவிரவாதம் பற்றி '72 ஹூரைன்' என்ற படம் உருவாகி உள்ளது. ஹூரைன் என்றால் 'கன்னிகள்' என்று பொருள்.
இந்த படத்தை 'லாகூர்' படத்தை இயக்கி பரபரப்பு கிளப்பிய சஞ்சய் பூரன் சிங் சவுகான் இயக்கி உள்ளார். ஆமிர் பஷிர், பவன் மல்ஹோத்ரா, ரஷித் நாஜ் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் வருகிற 7ம் தேதி வெளியாகிறது. இந்தி, ஆங்கிலம், தமிழ் உட்பட 10 மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது.
தீவிரவாத அமைப்புகளின் தலைவர்கள், இளைஞர்களை எவ்வாறு மூளைச் சலவைச் செய்து தீவிரவாத செயலுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதை இந்தப் படம் பேசுகிறது. “இது தீவிரவாதம் பற்றி பேசும்படம் தான். இதில் எந்த சமூகத்தையும் தொடர்புபடுத்த வேண்டாம்”என்று இயக்குநர் சஞ்சய் பூரன் சிங் தெரிவித்துள்ளார்.