5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் அனிமல். ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி டியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சைக்கோ கேங்ஸ்டர் கதை களத்தில் உருவாகும் இந்த படத்தை டி சீரியஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளிவந்த முன்னோட்ட வீடியோ ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
ஏற்கனவே இந்த வருடம் ஆகஸ்ட் 11ம் தேதி அன்று இப்படம் வெளியாகும் என்று அறிவித்த நிலையில் ஒரு சில காரணங்களால் இந்த படம் டிசம்பர் மாதத்திற்கு தள்ளிப்போகிறது என்று தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.