ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

கஜோல்…. பாலிவுட் ரசிகர்கள் கொண்டாடும் நடிகை மட்டுமல்ல, தமிழ் சினிமா ரசிகர்களும் கொண்டாடிய ஒரு நடிகை. ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், பிரபுதேவா, அரவிந்த்சாமி நடித்த 'மின்சார கனவு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். அப்போது ஹிந்தியில் டாப் நடிகையாக இருந்த கஜோல், அப்படத்தின் மூலம் தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்றார். அவரது நடிப்பும், பாடல்களில் அவர் ஆடிய நடனமும் இப்போதும் ரசிகர்களை நினைத்துப் பார்க்க வைப்பவை. குறிப்பாக 'வெண்ணிலவே…வெண்ணிலவே..' பாடலில் அப்படியே ஈர்த்திருப்பார். அதன்பின் 20 வருடங்களுக்குப் பிறகு 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் நடித்தார்.
கஜோல் இப்போதும் தன்னுடைய நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். 30 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் பிரபலமாக இருப்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் கஜோல் நேற்று கருப்பு நிற ஆடையில் சில புகைப்படங்களைப் பதிவிட்டு 'பிளாக்' என்பதற்கான அர்த்தம் என்ன என்பதையும் குறிப்பிட்டுள்ளார். 'பி' என்றால் போல்டு (தைரியமான), எல் என்றால் 'லேசிலி லவ்லி' (சோம்பேறித்தனமான அழகு), ஏ என்றால் 'ஆல் இஸ் வெல்' (அனைவரும் நலம்), சி என்றால் 'காபி', கே என்றால் அது கஜோல் எனப் பதிவிட்டுள்ளார். 50ஐ நெருங்கும் வயதிலும் கஜோல் அழகுடனே அசத்துகிறார்.