இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் ஜவான். நயன்தாரா, பிரியாமணி , விஜய் சேதுபதி, யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் தீபிகா படுகோனேவும் நடித்துள்ளார். அனிரூத் இசையமைக்கும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி அன்று உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் ஜவான் படத்தின் முதல் சிங்கிள் தமிழில் (வந்த இடம்), ஹிந்தியில் ( ஜிந்தா பந்தா) என்ற பெயர்களில் முதல் சிங்கிள் இன்று மதியம் 12.50 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர்.
அதன்படி மூன்று மொழிகளிலும் இந்த பாடல் வெளியிடப்பட்டது. இந்த பாடலை அனிருத் பாடி உள்ளார். நூற்றுக்கணக்கான பெண் நடன கலைஞர்களுடன் ஷாரூக்கான் ஆடுவது போன்று இந்த பாடல் வெளியாகி உள்ளது. ஷாரூக்கான் உடன் நடிகை பிரியாமணியும் இணைந்து ஆடி உள்ளார்.