இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தை பொறுத்தவரை எப்போதுமே நெப்போடிசத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருபவர். நெப்போடிசத்தை ஊக்குவிக்கிறார் என்பதாலேயே பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹருக்கு எதிராகவும் தனது கருத்துக்களை தெரிவித்து வருபவர். இந்த நிலையில் கரண் ஜோஹர் இயக்கத்தில் ராக்கி அவுர் ராணி கி கஹானி என்ற படம் இந்த வாரம் வெளியாகியுள்ளது. போதாக்குறைக்கு கங்கனா தன் எதிரியாக கருதும் ஆலியா பட் தான் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு படத்தையும் கரண் ஜோஹரையும் சரமாரியாக விமர்சித்துள்ளார் கங்கனா. குறிப்பாக 90களில் கரண் ஜோஹர் தான் எடுத்த படங்களின் கலவையாக இந்த படத்தை உருவாக்கி இருப்பதாகவும் இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ற மாதிரி அப்டேட் ஆகாமல் இன்னும் அதே பழைய பாணியிலான செட்டுகள், காட்சிகள் என பழைய ஆளாகவே இருக்கிறார் என்றும் கூறியுள்ள கங்கனா, "கரண் ஜோஹர் நீங்கள் பேசாமல் இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி ரிட்டயர்மென்ட் வாங்கி கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த படத்தை எல்லாம் தயாரிப்பதற்கு இவ்வளவு பெரிய தொகையை யார் கொடுத்தார்களோ தெரியவில்லை. நல்ல படம் தயாரிக்கும் படைப்பாளிகள் இப்படி பணம் கொடுப்பவர்கள் கிடைக்காமல் அலைகிறார்கள் என்றும் கூறியுள்ளாா் கங்கனா.
படத்தின் ஹீரோ ரன்வீர் சிங்கை பற்றி கூறும்போது, தயவு செய்து இது போன்ற படங்களில் நடித்து உங்கள் பெயரை எடுத்துக் கொள்ளாதீர்கள். இந்த படத்தில் உங்களது காஸ்டியூம், கேரக்டர் எல்லாவற்றையும் பார்க்கும்போது பபூன் தான் ஞாபகத்திற்கு வருகிறார்" என்று அவரையும் தன் பங்கிற்கு விமர்சித்துள்ளார்.