நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
பாலிவுட் நடிகை பிபாஷா பாசு தனது படங்களில் அற்புதமான நடனத்தினால் ரசிகர்களை கவர்ந்தவர். தமிழில் விஜய் நடித்த சச்சின் படத்தில் இரண்டாவது கதாநாயகியாகவும் நடித்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கரண் சிங் குரோவர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த வருடம் நவம்பர் மாதம் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தை பிறந்து 9 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது குழந்தை பிறக்கும்போதே இதயத்தில் இரண்டு துவாரங்களுடன் பிறந்தது என்கிற அதிர்ச்சி தகவலை கண்ணீருடன் வெளியிட்டுள்ளார் பிபாஷா பாசு.
இது குறித்து அந்த பேட்டியில் அவர் கூறும்போது, “எங்கள் முதல் குழந்தைக்காக நாங்கள் மிகவும் ஆர்வமாக காத்திருந்தோம். நான் பெண் குழந்தை தான் பிறக்கும் என என் கணவரிடம் உறுதியாக கூறி வந்தேன். அதேபோல எங்களுக்கு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த மூன்றாவது நாளில் தான் பிறக்கும்போதே இருதயத்தில் இரண்டு துவாரங்களுடன் பிறந்துள்ளது என்கிற அதிர்ச்சி கலந்த உண்மை எங்களுக்கு தெரிய வந்தது.
அதன் பிறகு வந்த நாட்கள் மிகப் போராட்டமாக கழிந்தன. இந்த தகவலை நாங்கள் எங்கள் குடும்பத்திற்கு கூட சொல்லாமல் மகளுக்கு மருத்துவம் பார்த்தோம். பிறந்த மூன்றாவது மாதத்தில் அவளுக்கு ஓபன் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது அவள் எல்லோரையும் போல நலமுடன் இருக்கிறாள். எந்த பெற்றோருக்கும் இதுபோன்ற நிலைமை வரக்கூடாது” என்று கூறியுள்ளார்.