துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கவுரி கான் தயாரித்துள்ள படம் 'ஜவான்'. அட்லி இயக்கி உள்ளார். ஷாரூக்கான், தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 100 சதவிகித ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள இதில் 5 சர்வதேச சண்டை இயக்குனர்கள் பணியாற்றி உள்ளனர்.
இதுகுறித்து தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஜவான் படத்தின் சண்டை காட்சிகளுக்காக சர்வதேச அளவில் பிரபலமான 5 சண்டை பயிற்சி இயக்குநர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். ஸ்பிரோ ரஸாடோஸ், யானிக் பென், கிரேக் மெக்ரே, கெச்சா காம்பக்டீ, சுனில் ரோட்ரிக்ஸ் ஆகியோர் பணியாற்றி உள்ளனர். இவர்களுடன் இந்திய சண்டை இயக்குனர் அனல் அரசு சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் உலக அளவில் சிறந்த படங்களுக்கு சண்டை காட்சிகளை அமைத்துள்ளனர். ஜவான் அதிரடி ஆக்சன் காட்சிகளை உள்ளடக்கிய படம். இதில் கைகளால் தாக்கிக் கொள்ளும் சண்டைக்காட்சி. பைக், டிரக், கார் சேசிங் என பல வகையான சண்டைக் காட்சிகள் இடம் பிடித்திருக்கிறது. மிகவும் நுட்பமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஆக்ஷன் காட்சிகள் அந்தந்த நிபுணர்களை கொண்டு படமாக்கப்பட்டுள்ளது.