தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கடந்த சில நாட்களாகவே நமது நாட்டின் பெயரான இந்தியா என்பதை இனிவரும் காலத்தில் பாரத் என மாற்றுவதற்கு மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக ஒரு தகவல் வெளியானது. இதை தொடர்ந்து பெயரை மாற்றக்கூடாது என்று ஒரு தரப்பினரும், பாரத் என்கிற பெயர் நன்றாக தானே இருக்கிறது என ஆதரவாக ஒரு தரப்பினரும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இது தொடர்பாக விவாதம் மீடியாக்களிலும் சோசியல் மீடியாக்களிலும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தொடர்ந்து தேசபக்தி படங்களில் நடிக்கக்கூடிய பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், தற்போது, ‛மிஷன் ராணிகன்ஸ் - தி கிரேட் இந்தியன் ரெஸ்க்யூ' என்ற படத்தில் நடித்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் இந்த படம் வெளியாக இருக்கிறது. தற்போது இந்தியா பாரத் விவாதம் கிளம்பியுள்ளதை தொடர்ந்து படத்திற்கு, ‛மிஷன் ராணிகன்ஸ் - தி கிரேட் பாரத் ரெஸ்க்யூ' என டைட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல அக்ஷய் குமார் தான் பதிவிடும் டுவீட்டுகளில் எல்லாம் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்றே குறிப்பிட்டு வருகிறார். அதேசமயம் படத்தின் நாயகி பரிணிதி சோப்ரா, ‛இந்தியா' என்றே குறிப்பிட்டு வருகிறார்.