தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பதான், ஜவான் படங்களின் பெரிய வெற்றி ஆயிரம் கோடியை தாண்டிய வசூல் இவற்றால் இந்தியாவின் நம்பர் ஒன் நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். சமீப ஆண்டுகளாக சரிந்து கிடந்த பாலிவுட் சினிமாவை இந்த இரண்டு படங்களும் தூக்கி நிறுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அவரது பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. மிரட்டல்களும் அதிகரித்துள்ளது. இதனால் தனக்கு பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என்று ஷாரூக்கான் மகாராஷ்டிர அரசுக்கு கடிதம் எழுந்தியிருந்தார்.
இதை தொடர்ந்து அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறைக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. “முழு நேரமும் ஷாரூக்கானுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்குவார்கள். பாதுகாப்புக்காக செல்லும் போலீசாரிடம் எம்பி 5 எந்திர துப்பாக்கிகள். ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கிளோக் பிஸ்டல்கள் இருக்கும். ஷாரூக்கான் வெளியில் எங்கு சென்றாலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் உடன் செல்வார்கள். இது தவிர ஷாரூக்கான் வீட்டிலும் துப்பாக்கி ஏந்திய 4 போலீஸ் கமாண்டோக்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள்” என்று சிறப்பு ஐ.ஜி. திலீப் சாவந்த் தெரிவித்துள்ளார்.




