சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
கடந்த 2014ல் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான படம் ‛1 - நேனொக்கடினே'. இயக்குனர் சுகுமார் இயக்கிய இந்தப் படம் கமர்சியல் ஆக்ஷன் படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த கிர்த்தி சனோன் இந்த படத்தின் மூலம் தான் முதன் முதலாக சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படம் வெளியாகி தற்போது பத்தாம் வருடத்தை தொட்டுள்ளது. படம் மட்டுமல்ல நாயகி கிர்த்தி சனோனுக்கும் இது வெற்றிகரமான பத்தாவது ஆண்டும் கூட.
மகேஷ்பாபுவின் ரசிகர்கள் இந்த படத்தின் அருமை பெருமைகளை பத்தாம் வருடம் கொண்டாட்டமாக சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர். இன்னொரு பக்கம் நடிகை கிர்த்தி சனோனும் திரையுலகில் தான் பத்து வருடங்களை கடந்துள்ளது குறித்தும் இந்த படம் குறித்தும் நெகிழ்ச்சியாக சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து கிர்த்தி சனோன் கூறும்போது, 'நான் சினிமாவில் நுழைந்து பத்து வருடங்கள் ஆயிற்று என்பதை நம்பவே முடியவில்லை. எனது முதல் படமே சூப்பர் ஸ்டார் ஆன உங்களுடன் தான் மகேஷ் பாபு சார்.. பல விஷயங்கள் இன்றும் மறக்க முடியாத நினைவுகளாக என் மனதில் இருக்கின்றன. அதன்பிறகு பல வருடங்கள் கழித்து உங்களை சந்தித்தபோது எவ்வளவோ விஷயங்கள் மாறி இருந்தாலும் நீங்கள் அப்படியே தான் இருக்கிறீர்கள். நினைவில் வைத்திருக்க கூடிய பல அற்புதமான நிகழ்வுகளையும் கொடுத்ததற்காக உங்களுக்கும் நன்றி சுகுமார் சார்” என்று கூறியுள்ளார்.