மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'சூரரைப்போற்று'. கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டுள்ள இப்படம் தற்போது ஹிந்தியில் 'சர்பிரா' என்கிற பெயரில் ரீ-மேக்காகி வருகிறது. இதில் கதாநாயகனாக நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராதிகா மதன் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும், அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். வருகின்ற ஜூலை 12ம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்த நிலையில் இதில் மூன்று காட்சிகளில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தின் கதையோட்டதைத் பின்னனி குரலில் சூர்யா பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது.