துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ஆதித்யா சாகஸ் ஜம்பாலே இயக்கத்தில் யாமி கவுதம், பிரியாமணி நடித்துள்ள பாலிவுட் படம் 'ஆர்டிக்கிள் 370'. அருண் கோவில், கிரன் கர்மாகர், ஸ்கந்த் தாக்கூர் உள்பட பலர் நடித்துள்ளனர். பி62 ஸ்டூடியோ தயாரித்துள்ள படத்தை ஜியோ ஸ்டூடியோ வெளியிட்டுள்ளது. படம் கடந்த 23ம் தேதி வெளிவந்தது.
இந்த படம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்து பேசுகிறது. சுமார் 20 கோடியில் தயரான இந்த படம் 50 கோடியை தாண்டி வசூலித்து வருகிறது. இந்த படத்தில் பிரியாமணி காஷ்மீர் மாநில பாதுகாப்பு செயலாளர் ராஜேஸ்வரி சாமிநாதன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார், யாமி கவுதம் தேசிய பாதுகாப்பு படை ஏஜெண்டாக நடித்துள்ளார்.
இந்த படம் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் என்று அரேபிய நாடுகள் தங்கள் நாட்டில் படத்தை திரையிட தடை விதித்திருக்கிறது. இப்படம் வெளியாகும் முன்பு ஜம்மு-காஷ்மீரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மக்கள் உண்மையான தகவல்களை தெரிந்து கொள்ள இப்படம் உதவும்” என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.