சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து |
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பை அருகே பாந்த்ராவில் உள்ள இவரது வீட்டின் அருகே 2 மர்ம நபர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் துப்பாக்கியால் 3 ரவுண்ட் சுட்டு தப்பியோடினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
துப்பாக்கிச்சூடு நடைபெறும் போது சல்மான் கான் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. சல்மான் கானுக்கு ‛ஒய் பிளஸ்' பாதுகாப்பு போடப்பட்டும் துப்பாக்கிச்சூடு நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.