தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

பிரபல போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே, 27. தீவானாபேன் என்ற போஜ்புரி படத்தில் நடித்தார். சில ஹிந்தி படங்கள் மற்றும் டிவி ஷோக்களிலும் நடித்துள்ளார். கணவர் சந்திரமணி ஜன்கட் உடன் மும்பையில் இவர் வசித்து வந்தார். தனது சகோதரியின் திருமணத்திற்காக பீஹாரில் உள்ள பாகல்பூருக்கு வந்திருந்தார். குடும்பத்தினர் உடன் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கிய நிலையில் மின்விசிறியில் தூக்கிட்டு அம்ரிதா தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்வதற்கு முன் அம்ரிதா தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில், ‛‛அவளது வாழ்க்கை இரு படகுகளில் இருக்கிறது. என் படகை மூழ்கடித்து அவள் வாழ்க்கையை எளிதாக்கினேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
அம்ரிதாவின் தற்கொலை பற்றி குடும்பத்தினர் கூறுகையில், போதிய பட வாய்ப்பு இல்லாததால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். அதனால் கூட தற்கொலை செய்திருக்கலாம் என்கிறார்கள்.