23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
90களில் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரவீனா டாண்டன். தமிழில் 'சாது, ஆளவந்தான்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் அவரைப் பற்றிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவை வெளியிட்ட மோசின் ஷேக் என்பவர் மீது 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு ரவீனா டாண்டன் சார்பில் வக்கீல் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
“தன்னை பத்திரிகையாளராக சொல்லிக் கொள்ளும் அந்த நபர் எக்ஸ் தளத்தில் சமீபத்தில் போலி வீடியோ ஒன்றைப் பரப்பியிருந்தார். அது தவறானது, ஏமாற்றுவது. ஜூன் 1ம் தேதி மும்பையில் ரவீனா வீட்டிற்கு வெளியே நடந்த ஒரு சம்பவத்தில் அவரது வாகனம் அங்கிருந்த சில பெண்களை பாதித்ததாகவும், தன்னைச் சுற்றியிருந்த கூட்டத்தை விலக்குவதற்கு அவர் முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சிசிடிவி ஆதாரங்களில் அவரது வாகனம் பெண்கள் மீது மோதியதையோ அல்லது ரவீனா குடிபோதையில் இருந்ததையோ காட்டவில்லை,” என்று ரவீனாவின் வக்கீல் தெரிவித்தார்.