தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பாலிவுட் நடிகை நடாஷா ஸ்டான்கோவிக். பாலிவுட் படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடுவதன் மூலம் புகழ் பெற்றவர். திக்ஷியான், 7 அவர்ஸ் டு கோ உள்ளிட்ட சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். ஹிந்தி பிக்பாஸ் 8வது சீசனிலும் கலந்து கொண்டார். அடிப்படையில் மாடல் அழகியான இவர் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவை காதலித்து 2020ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகஸ்ட்யா என்ற மகன் இருக்கிறார்.
கடந்த சில மாதங்களாக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் இவரும் பிரிவதை வெளிப்படையாக அறிவித்துள்ளனர். ஹர்திக் பாண்ட்யா - நடாஷா இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், “இது கடினமான முடிவு தான் என்றாலும் இருவரின் நலன் கருதி பரஸ்பர அடிப்படையில் நாங்கள் பிரிகிறோம். எங்களது மகன் இருவரது பராமரிப்பில் இருப்பார். அவனது மகிழ்ச்சிக்காக எல்லாவற்றையும் செய்வோம். எங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு அனைவரும் மதிப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பட்டுள்ளனர்.




