துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜய் தேவ்கனின் சகோதரி மகன் ஆமென் தேவ்கன், கதாநாயகியாக நடிகை ரவீணா டான்டன் மகள் ராஷா தடானி நடிக்கும் படம் 'ஆசாத்'. இப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது.
சுதந்திர காலத்திற்கு முன்பான ஒரு படமாக இப்படம் உருவாகி வருகிறது. குதிரையேற்ற வீரராக இருப்பவர் அஜய் தேவ்கன். ஆங்கிலேயே ராணுவத்துடன் நடந்த தாக்குதல் ஒன்றின் போது அவரது அன்புக்குரிய குதிரை காணாமல் போய்விடுகிறது. அந்தக் குதிரையைக் காப்பாற்றும் வேலை, ஆமென் தேவ்கனுக்கு வருகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
நேற்று வெளியான இந்த டீசர் அதற்குள்ளாக 7 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. “ஆர்யன், ராக் ஆன், கை போ சே, பிதூர், கேதார்நாத், சண்டிகர் கரே ஆஷிக்கி” உள்ளிட்ட படங்களை இயக்கிய அபிஷேக் கபூர் இப்படத்தை இயக்குகிறார்.
பாலிவுட்டின் வாரிசுகள் பட்டியலில் இணைந்துள்ள ஆமென், ராஷா ஆகியோருக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். டீசரைப் பார்க்கும் போது படத்தின் உருவாக்கமும், பிரம்மாண்டமும் அசத்தலாக உள்ளது.