சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு |

பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு அடிக்கடி மும்பை தாதா குரூப்களிடமிருந்து கொலை மிரட்டல் வரும். அரசு அவருக்கு பாதுகாப்பு அளித்திருந்தாலும் அவரும் தனக்கென்று தனி பாதுகாப்பு படை வைத்திருக்கிறார். சமீபத்தில் 5 கோடி கேட்டு சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த ராஜஸ்தானை சேர்ந்தவரை போலீசார் கர்நாடகாவில் கைது செய்தனர்.
இந்த நிலையில் ஷாருக்கானுக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளது. மும்பை பாந்திரா போலீஸ் நிலையத்துக்கு சத்தீஷ்கார் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து பைசன் கான் என்பவர் போனில் பேசியுள்ளார். “50 லட்சம் தரவில்லை எனில் நடிகர் ஷாருக்கானை கொலை செய்துவிடுவேன். அவர் தொலைபேசி எண் என்னிடம் இல்லை. அதனால்தான் உங்களிடம் இதனை கூறுகிறேன். நீங்களே வாங்கி கொடுத்து விடுங்கள்” என்று கூறியுள்ளார்.
இந்த கொலை மிரட்டலை அடுத்து பாந்திரா பேண்டு ஸ்டாண்டு பகுதியில் உள்ள ஷாருக்கானின் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை பிடிக்க ராய்ப்பூருக்கு விரைந்தனர். கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட போன் நம்பர் பைசன் கான் என்பவருக்கு சொந்தமானது என்று உறுதியானது. இதையடுத்து ராய்பூர் போலீசார் உதவியுடன் அவரை பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர் ஒரு வழக்கறிஞர் என்பது தெரியவந்தது. தனது போன் கடந்த வாரம் தொலைந்து விட்டதாகவும், அதன் மூலம் மர்ம ஆசாமி எனது பெயரை பயன்படுத்தி மிரட்டல் விடுத்து இருக்கலாம் என்றும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.