சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து முன்னனி கதாநாயகியாக வலம் வந்தவர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். சேத்தன் டிகே இயக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' எனும் படத்தில் காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தை பூஜையுடன் அறிவித்தனர்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை புனேவில் தொடங்கியுள்ளனர் என காஜல் அகர்வால் அவரது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் சொல்லப்படாத கதை, தாக்கத்தை ஏற்படுத்த போகிற கதை. ஆக., 15 தேதியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள், தியேட்டரில் படம் வெளியாகிறது என தெரிவித்துள்ளார் காஜல்.
விவசாயம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து ஊழலை மையமாக வைத்து இப்படம் உருவாகுகிறது என தவகல் வெளியாகி உள்ளது.