நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
லஷ்மண் உடேகர் இயக்கத்தில், விக்கி கவுஷல், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த ஹிந்திப் படம் 'ச்சாவா'. மராத்திய மன்னரான சத்ரபதி சம்பாஜி மகாராஜ் வாழ்க்கை வரலாற்றை மையப்படுததிய சரித்திரப் படமாக வெளிவந்த இந்தப் படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
இந்தப் படத்தில் இடம் பெற்ற கனோஜி, கன்ஹோஜி ஷிர்கே கதாபாத்திரங்களைத் தவறுதலாகக் காட்டியிருப்பதைக் கண்டித்து அவர்களது சந்ததியினர் 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்துள்ளனர். படத்தில் அவர்கள்தான் சம்பாஜி மகாராஜை முகலாயர்களிடம் காட்டிக் கொடுத்ததாகவும், அதுதான் அரை கொடூரமாக தூக்கிலிடக் காரணமாக வழிவகுத்தது என காட்டப்பட்டுள்ளது.
வரலாற்றைத் திரித்து, தவறான சித்தரிப்புகளால் தங்களது குடும்ப நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக 'ச்சாவா' தயாரிப்பாளர்களை ஷிர்கே சந்ததியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். பிப்ரவரி 20ம் தேதி அவர்கள் இயக்குனர் லஷ்மண் உடேகருக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ஷிர்கே சந்ததியைச் சேர்ந்த பூஷன் ஷிர்கே என்பரை அணுகி இயக்குனர் லஷ்மண் உடேகர் மன்னிப்பு கேட்டுள்ளார். “ஷிர்கே குடும்பத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. படம் ஏதேனும் அசௌகரியத்தை ஏற்படுத்தி இருந்தால், நான் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். 'ச்சாவா' படத்தில் கனோஜி மற்றும், கன்ஹோஜி பெயர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். அவர்களின் குடும்பப் பெயரையோ அல்லது அவர்களின் கிராமத்தையோ குறிப்பிடவில்லை,” என்று கூறியுள்ளார்.
இருந்தாலும் 'ச்சாவா' தயாரிப்பாளர்கள் சர்ச்சைக்குரிய அந்த காட்சிகளை நீக்கத் தவறினால் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என ஷிர்கே சந்ததியினர் எச்சரித்துள்ளனர்.