2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? |
கடந்த 20 வருட பாலிவுட் சினிமாவை ஆய்வு செய்து பார்த்தால் நடிகர் அமீர்கான், மற்ற இரண்டு கான் நடிகர்களை போல, ஆக்சன் பாதையில் செல்லாமல் நல்ல கதை அம்சம் மற்றும் கதாபாத்திரம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருவதை பார்க்க முடியும். அந்த வகையில் கடந்த 2007ல் அவர் நடித்த படம் தான் 'தாரே ஜமீன் பர்'. ஒரு வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கும் அமீர்கானுக்கும் இடையேயான பாசப்பிணைப்பை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. அமீர்கானே இந்த படத்தை இயக்கியும் இருந்தார். ஆஸ்கர் விருது போட்டி வரை இந்த படம் சென்றது.
தற்போது இந்த படம் வெளியாகி 18 வருடங்கள் கழிந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லும் விதமாக 'சிதாரே ஜமீன் பர்' என்கிற திரைப்படம் உருவாகி வந்தது. ஆனால் இந்தப்படத்தை இயக்குனர் ஆர்.எஸ்.பிரசன்னா என்பவர் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் வரும் ஜூன் 20ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு பேஸ்கட்பால் கோச்சாக அமீர்கான் நடிக்கிறார் என்பதை போஸ்டர் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.