கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், பிரபாஸ் நடிக்க உள்ள 'ஸ்பிரிட்' படம் குறித்த சர்ச்சைதான் கடந்த ஒரு வாரமாக பாலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரங்களில் அதிகமாக இருந்து வருகிறது. இப்படத்தின் நாயகியாக தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில் திரிப்தி டிம்ரி கதாநாயகியாக அறிவிக்கப்பட்டார். அதன்பின் தனது படத்தின் கதையைப் பற்றி வெளியில் சொல்லிவிட்டார்கள் என 'டர்ட்டி பிஆர் கேம்ஸ்' என கடுமையாக விமர்சித்திருந்தார் சந்தீப். அவர் தீபிகாவைத்தான் அப்படி சொன்னார் என சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் 'மா' பட டிரைலர் வெளியீட்டின் போது பேசிய பாலிவுட்டின் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன், “புதிய அம்மாக்கள் 8 மணி நேர வேலை என்பதை விவேகமான இயக்குனர்கள் ஆதரிக்கிறார்கள். அந்த கோரிக்கையை யாரும் எதிர்க்க மாட்டார்கள்,” என்றும் பேசியிருந்தார்.
அவர் தீபிகா படுகோனே பற்றித்தான் அப்படிப் பேசியிருப்பார் என தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன. சந்தீப் ரெட்டி வங்காவுக்கும், தீபிகாவுக்கும் இடையில் எழுந்துள்ள பிரச்சனையில் அவர் தீபிகாவுக்கு ஆதரவாக இப்படி பேசியிருக்கிறார் என பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
'ஸ்பிரிட்' படத்தில் நடிப்பதற்காக 8 மணி நேர வேலை, அதிக சம்பளம், லாபத்தில் பங்கு, 20க்கும் மேற்பட்ட தனது ஊழியர்கள் என தீபிகா அதிக டிமான்ட் வைத்தாக சொல்லப்பட்டது. அதை ஏற்காமல்தான் சந்தீப் படத்திலிருந்து தீபிகாவை பேச்சு வார்த்தையோடு நீக்கிவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018ல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. தனது எட்டு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளவே தீபிகா எட்டு மணி நேர வேலை என்பதில் உறுதியாக இருக்கிறார் என்கிறார்கள்.