நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
மாதவன், நயன்தாரா, சித்தார்த் நடித்த 'டெஸ்ட்' படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. தற்போது அவர் நடித்துள்ள இந்திப் படமான 'ஆப் ஜெய்சா கோய்' (உன்னைப் போல் ஒருவர்). என்ற படமும் ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது. நடுத்தர வயது நபர் தனது சொந்த வாழ்க்கையின் விதிகளை மீண்டும் எழுதத் தொடங்கினால் என்ன ஆகும்? என்பதுதான் படத்தின் கதை. கதைநாயகனாக ஸ்ரீரேணு திரிபாதி என்ற கேரக்டரில் மாதவனும், அவரது மனைவி மது போஸாக பாத்திமா சனா ஷேக்கும் நடித்திருக்கிறார்கள்.
விவேக் சோனி இயக்கியுள்ள இந்தப் படத்தை தர்மாடிக் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. மேலும் ஆயிஷா ராசா, மணீஷ் சவுத்ரி மற்றும் நமித் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். வருகிற ஜூலை 11ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
படம் குறித்து மாதவன் கூறும்போது "நான் இதற்கு முன்பு நடித்த எந்தவொரு காதல் கதையையும் போல 'ஆப் ஜெய்சா கோய்' இல்லாமல் முழுக்க முழுக்க மனித மனங்களைச் சார்ந்தது. நான் நடித்த மிகவும் சிக்கலான கதாபாத்திரங்களில் ஸ்ரீரேணுவும் ஒருவர். கம்பேனியன்ஷிப்பிற்காக ஏங்கும் ஒருவர். ஆனால், அதை எப்படிக் கேட்பது என்று கூட தெரியாத உள்ளுக்குள் அதிக உணர்ச்சிவசப்பட்டவர்.
இந்தப் படம் அதிரடியாக இருக்காது. ஆனால் பொறுமையாகவும், மென்மையாகவும் பார்ப்பவர்களை ஆழமாகப் பாதிக்கும் வகையிலும் இருக்கும். வாழ்க்கையிலோ அல்லது காதலிலோ புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்தவர்களிடம் இது எவ்வாறு பேசுகிறது என்ற கருவால் நான் ஈர்க்கப்பட்டேன். 'ஆப் ஜெய்சா கோய்' சொந்த விதிமுறைகளின்படி வாழத் தொடங்குவதற்கு வயது ஒரு தடையில்லை, நீங்கள் எப்போது வேண்டுமானலும் வாழத் தொடங்கலாம் என்பதை அழுத்தமாக பேசும் கதை” என்றார்.