பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் | மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் |
பாலிவுட்டின் பிரபல இயக்குனரான சஞ்சய் லீலா பன்சாலி வரலாற்று படங்களை இயக்குவதில் வல்லவர். தற்போது அவர் ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கவுசல் நடிப்பில் வரலாற்று பின்னணியில் உருவாகி வரும் ‛லவ் அண்ட் வார்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில், ராஜஸ்தானை சேர்ந்த தயாரிப்பாளர் பிரதீக் ராஜ் மாத்தூர் என்பவர் சஞ்சய் லீலா பன்சாலி தனக்கு பணம் தராமல் ஏமாற்றி விட்டார் என்றும், தனது மேனேஜர்கள் மூலமாக தன்னை மிரட்டியதுடன் தன்னை தாக்கவும் செய்தார் என்றும், பிகானிரில் உள்ள பிக் வால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் தரப்பில் கூறும்போது, இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராஜஸ்தானில் உள்ள பிகானிர் நகரத்தில் நடைபெற்று வந்தது. இந்தப் பகுதியில் படப்பிடிப்பு நடத்துவதற்கு தேவையான அரசு அனுமதி, லொகேஷன் ஏற்பாடுகள் மற்றும் படக்குழுவிற்கு தேவையானவற்றை கவனிக்கும் நிர்வாகம் ஆகியவற்றை ரத்னா பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் பிரதீக் ராஜ் மாத்தூர் என்பவரிடம் ஒப்படைத்து இருந்தார். ஆனால் எந்தவித பணமும் செட்டில் செய்யாமல் இடையிலேயே தன்னை சஞ்சய் லீலா பன்சாலி கழட்டிவிட்டார் என்றும் இது குறித்து அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு நியாயம் கேட்க சென்ற போது தன்னுடைய மேனேஜர்களை வைத்து மிரட்டியதுடன் தாக்கவும் செய்தார் என்றும் புகாரளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது..
அதேசமயம் இது குறித்து ஆரம்பத்திலேயே காவல்துறையில் புகார் அளித்தும் அவர்கள் அதை ஏற்க மறுத்துள்ளனர் என்றும் அதன் பிறகு நீதிமன்றம் சென்று புகார் மனு அளித்த பின்னரே நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் சஞ்சய் லீலா பன்சாலி மீது தற்போது எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.