தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

அயன் முகர்ஜி இயக்கத்தில், ஹிருத்திக் ரோஷன், ஜுனியர் என்டிஆர், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'வார் 2'. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் எதிர்பாராத விதத்தில் தோல்வியை சந்தித்தது.
சுமார் 300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரான இந்தப் படத்தின் உலக அளவிலான தியேட்டர் வியாபாரமும் 300 கோடி வரை நடந்தது. அவ்வளவு தொகையை வசூலிக்க இந்தப் படம் குறைந்த பட்சம் 500 கோடியைக் கடந்து வசூலிக்க வேண்டும். ஆனால், உலக அளவில் சுமார் 350 கோடி வசூலை மட்டுமே கடந்துள்ளது.
இந்தியாவில் சுமார் 280 கோடி வசூலையும், வெளிநாடுகளில் 70 கோடி வசூலையும் பெற்றுள்ளது. இந்திய வசூலில் ஜிஎஸ்டி வரி போக 240 கோடிதான் நிகர வசூல். அதில் பங்குத் தொகையெல்லாம் பிரித்தால் கிடைப்பது நஷ்டம் மட்டுமே. ஜுனியர் என்டிஆர் நடித்ததால் தெலுங்கிலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் அங்கு 60 கோடி வசூலை மட்டுமே கடந்துள்ளது.
மொத்தத்தில் 200 கோடிக்கும் கூடுதலான நஷ்டத்தை இந்தப் படம் கொடுக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




