தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

மலையாளத்தில் இளம் முன்னணி நடிகர் வரிசையில் இடம் பிடித்திருப்பவர் நடிகர் உன்னி முகுந்தன். கடந்த வருடம் தமிழில் சூரி, சசிகுமார் நடித்த 'கருடன்' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் அவர் நடிப்பில் கடந்த வருடம் இவரது நடிப்பில் வெளியான 'மார்கோ' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 100 கோடி வசூலித்தது. இந்த நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக இருக்கும் 'மா வந்தே' என்கிற படத்தில் பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் உன்னி முகுந்தன் நடிக்க இருக்கிறார்.
இதன் மூலம் தற்போது பாலிவுட்டிலும் கவனிக்கத்தக்க நடிகராக மாறியுள்ளார் உன்னி முகுந்தன். இதனை தொடர்ந்து பிரபலமான ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் உன்னி முகுந்தனை வைத்து ஹிந்தியில் அடுத்தடுத்து இரண்டு படங்களை தயாரிக்க இருக்கிறது. இதுகுறித்து அறிவிப்பை உன்னி முகுந்தனின் பிறந்த நாளன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம்.