ஓடிடி ரசிகர்களுக்கு ட்ரீட்: ஆவலுடன் எதிர்பார்த்த படங்கள் வெளியீடு..! | 80களில் இந்த திரைப்பிரபலங்கள் எப்படி இருந்திருப்பார்கள்...!! | 'ஓடிடி'க்காக மறு எடிட் செய்யப்படும் 'டாக்சிக்' | 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் 'ஜாக்பாட்' நிகழ்ச்சி | விற்பனை பிரதிநிதிகளின் வாழ்க்கையை பேசும் 'கோல்டு கால்' | ‛பத்தா' படம்... 'மகளே' பாடல் வெளியீடு : அப்பாமகள் பாசம் கதையா? | 'சிக்மா' டைட்டிலுக்கு விளக்கம் சொன்ன ஜேசன் சஞ்சய் | பிளாஷ்பேக்: தமிழ் படத்தில் ஒரே ஒரு காட்சியில் அறிமுகமான மோகன்லால் | மராத்தி தெரிந்திருந்தும் சஞ்சய் தத் வேண்டுமென்றே பேசாமல் தவிர்த்தாரா ? : வெளிச்சம் போட்ட பழைய வீடியோ | உதவி இயக்குனராக இருந்தவர் ‛ஹனுமான் அன்ஷ்' படத்தின் ஹீரோவாக மாறியது எப்படி? |

இந்திர குமார் இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்து வெளியான நகைச்சுவை படம் தமால் 4. கடந்த ஜூலை 10ம் தேதி திரைக்கு வந்த இப்படத்தில் ரிதேஷ் தேஷ்முக், அர்ஷத் வர்சி, ஜாவேத் ஜாப்ரி, ரவி கிஷன், சஞ்சய் மிஸ்ரா, உபேந்திர லிமயே, அஞ்சலி ஆனந்த், சஞ்ஜீதா ஷேக், ஈஷா குப்தா, விஜய் பட்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் இந்த தொடரிலேயே அதிக வசூல் செய்த படமாக பாக்ஸ் ஆபீஸில் 224 கோடி வசூலித்துள்ளது.
இப்படம் வருகிற செப்டம்பர் 4ம் தேதி அன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. கடந்த ஜூலை 10ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களை நிறைவு செய்த நிலையில், தற்போது இப்படம் ஓடிடி பயணத்தை தொடங்குகிறது. டிஜிட்டல் தளத்தில் ரசிகர்களிடம் இந்த படம் எத்தகைய வரவேற்பை பெறுகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.