போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

மாதவன் - விஜய்சேதுபதி நடிப்பில் புஷ்கர்—காயத்ரி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் விக்ரம் வேதா. இந்தப்படம் தற்போது இந்தியில் ரீமேக்காக இருக்கிறது. வேதாவாக ஹிரித்திக் ரோஷனும் விக்ரமாக சயீப் அலிகானும் நடிக்க இருக்கின்றனர்.
ஆனால் முதலில் ஆமீர்கான் தான் வேதா கேரக்டரில் நடிப்பதாக இருந்தது. படத்தின் திரைக்கதை அவருக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதால் அவர் விலகியதாக சொல்லப்பட்டது. உண்மை என்னவென்றால் இந்தப்படத்தை பான் ஆசியா படமாக உருவாக்க நினைத்த ஆமீர்கான், இதன் கதையை அப்படியே ஹாங்காங் பின்னணியில் நடைபெறுவதாக மாற்ற சொன்னார். அதற்கான திரைக்கதையும் மாற்றி எழுதப்பட்டது.
ஆனால் கொரோனா தாக்கம், மற்றும் இந்தியா - சீனாவுக்கிடையேயான பிரச்சனை என இரண்டும் சேர்ந்து ஆமீர்கானின் திட்டத்தை தவிடுபொடியாக்கி விட்டது. ஏற்கனவே அமீர்கானின் தங்கல் படம் சீன மொழியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால், விக்ரம் வேதாவையும் அதே பாணியில் உருவாக்க நினைத்திருந்த ஆமீர்கான், அதற்கு வாய்ப்பில்லை என தெரிந்ததுமே இந்தப்படத்தில் இருந்து விலகிக் கொண்டாராம்.