வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை | இரண்டு பட வாய்ப்பை தவறவிட்ட அனுபமா பரமேஸ்வரன் |
பாலிவுட் பிக் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மும்பையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். மனைவி, மகன், மருமகள் ஆகியோர் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அமிதாப்பச்சன் மும்பை அந்தேரி பகுதியில் கட்டப்பட்டுள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் 27 மற்றும் 28 வது மாடிகளை இணைக்கும் வகையிலான ஒரு டபுள் வீட்டை வாங்கி உள்ளார்.
தமிழ் சினிமா நடிகர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் வீடு வாங்குவது பெருமைக்குரிய விஷயமாக மாறி இருப்பது மாதிரி இந்த குடியிருப்பில் வீடு வாங்குவது பாலிவுட் நட்சத்திரங்களுக்கு பெருமைக்குரிய விஷயமாக மாறி உள்ளது. நடிகை சன்னி லியோன், இயக்குனர் ஆனந்த் எல்.ராய், ஆலியா பட், ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பலர் இங்கு வீடு வாங்கி உள்ளனர்.
அமிதாப் பச்சன் வாங்கி உள்ள வீட்டின் மதிப்பு 31 கோடி ரூபாய். 5500 சதுர அடிகளை கொண்ட இந்த வீட்டுக்கு 6 கார் பார்க்கிங் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பத்திர பதிவு கட்டணமாக மட்டும் 62 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளார் அமிதாப் பச்சன். கொரோனா தொற்று காலத்தில் வீட்டில் உள்ளவர்கள யாராவது தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது வந்தால் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இந்த வீட்டை அமிதாப் பச்சன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.