அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு |
கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் பாலிவுட் நட்சத்திரங்கள் அவர்களால் முடிந்த பணிகளை செய்து வருகிறார்கள். அக்ஷய் குமார் 5 கோடி ரூபாய் வழங்கினார், சோனுசூட் வழக்கம்போல் தன் பணிகளை சுறுசுறுப்பாக தொடங்கி விட்டார். சல்மான்கான் ஆக்சிஜன் சிலிணடர் வங்கி தொடங்கி உள்ளார். பிரியங்கா சோப்ரா வெளிநாட்டில் நிதி திரட்டி வருகிறார்.
இந்த வரிசையில் நடிகை ஆலியா பட் தனது எடர்னல் சன்ஷைன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு தொடர் ஒன்றை தயாரிக்கிறார். இதுபற்றி அவர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கக்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அறிவியலே நமது நல்ல நண்பன். அறிவியல் நமக்கு தடுப்பூசியைத் தந்திருக்கிறது. தடுப்பூசிகள் நமக்கு நம்பிக்கையைத் தந்திருக்கிறது. இந்த நோய்தொற்றை முடிவுக்குக் கொண்டு வந்து நமது வாழ்வை மீண்டும் கட்டமைக்க உதவும் தடுப்பூசிகளுக்கு நன்றி.
தடுப்பூசி நமக்காகக் காத்திருந்தும் நம்மில் சிலர் இன்னும் அதை போட்டுக் கொள்வதற்கு தயக்கம் காட்டுகிறோம். இந்தத் தயக்கத்துக்கு முக்கியக் காரணம், சமூக ஊடகம் உள்ளிட்ட தளங்களில் பகிரப்படும் தவறான தகவல்கள், புரளிகள்.
இதனால் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் தொடரை தயாரிக்கிறேன். இந்தத் தொடரில், திறமையான மருத்துவர்கள், சர்வதேச சுகாதார ஆர்வலர்களிடம் பேசப் போகிறோம். அவர்கள் தடுப்பூசி பற்றிய உண்மைத் தகவல்களை, பகிரவுள்ளனர். இந்தத் தொடர் தடுப்பூசி பற்றிய மக்களின் சந்தேகங்களைத் தீர்க்க உதவும் என்று நம்புகிறேன். என்று தெரிவித்திருக்கிறார். இந்த தொடர் ஆடியோமேடிக் என்கிற பாட்காஸ்ட் தளத்தில் வெளியிடப்படுகிறது.