முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் | பேவரைட் ஆஸ்திரேலிய நடிகையுடன் புத்தாண்டை கொண்டாடிய நதியா | நான் ஹிந்தியில் படம் இயக்கினால் இவர்தான் ஹீரோ : வினோத் |

முதன்முதலில் தெலுங்கில் இயக்குனராக அறிமுகமானாலும், நடிகர் பிரபுதேவாவை ஸ்டார் இயக்குனர் அந்தஸ்திற்கு உயர்த்தியது பாலிவுட் திரையுலகம் தான். அதைத்தொடர்ந்து, நடிகராகவும் இயக்குனராகவும் இரட்டை குதிரை சவாரி செய்து வந்த பிரபுதேவா, கடந்த மூன்று வருடங்களில், ஹிந்தியில் சல்மான்கானை வைத்து தபாங்-3 மற்றும் சமீபத்தில் வெளியான ராதே என இரண்டு படங்களை இயக்கினார். இரண்டுமே தோல்விப்பட வரிசையில் தான் இடம் பிடித்தன.
இதனால் ஒரு வெற்றிப்படம் தந்து, தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் பிரபுதேவா. அதேசமயம் இனி நேரடி கதைகளை நம்பாமல், தனக்கு எப்போதும் கை கொடுக்கும் ரீமேக்கையே இந்த முறையும் கையில் எடுக்க உள்ளாராம் பிரபுதேவா.
அந்தவகையில் ஏற்கனவே தெலுங்கில் ஹிட்டான ஒரு படத்தை தான் ஹிந்தியில் ரீ-மேக் செய்ய இருக்கிறார் பிரபுதேவா. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் சாஜித் நாடியத்வாலா ஏற்கனவே வாங்கியுள்ளார். இதன் ரீமேக்கில் யார் நடிக்கப் போகிறார்கள், இது எந்த படத்தின் ரீமேக் என்பது குறித்து, தற்போதைக்கு படத்தின் தயாரிப்பாளரும், பிரபுதேவாவும் சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்க முடிவு செய்துள்ளார்களாம்.