வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜூன் ரெட்டி படத்தில் நடித்து பிரபலமானவர் ஷாலினி பாண்டே. அதன்பிறகு தமிழில் 100% காதல், கொரில்லா, நிசப்தம் போன்ற படங்களில் நடித்தார். தென்னிந்திய சினிமாவில் எதிர்பார்த்தபடி படங்கள் இல்லாததால் தற்போது ஹிந்தி சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் ஷாலினி பாண்டே. ஏற்கனவே ஹிந்தியில் இரண்டு படங்களில் நடித்துள்ள ஷாலினி பாண்டே, தற்போது ரன்வீர் சிங்குடன் ஜயீஸ்பாய் ஜோர்தர் என்ற படத்தில் நடிக்கிறார். அடுத்து மகாராஜா என்றொரு ஹிந்தி படத்திலும் கமிட்டாகி உள்ளார். தென்னிந்திய படங்களில் நடித்து வந்தபோது வெயிட் போட்டிருந்த ஷாலினி பாண்டே தற்போது ஸ்லிம்மாகி, கவர்ச்சியான போட்டோக்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.